< Back
ஆன்மிகம்
வாழ்க்கைத் தரம் உயர்த்தும் கிருபானந்த வாரியாரின் பொன்மொழிகள்..!
ஆன்மிகம்

வாழ்க்கைத் தரம் உயர்த்தும் கிருபானந்த வாரியாரின் பொன்மொழிகள்..!

தினத்தந்தி
|
7 Jun 2022 4:30 PM IST

தான் செல்லும் இடங்களிலெல்லாம், கிருபானந்த வாரியார் எளிய மக்களிடம் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையும் அறியாமையை விலக்குபவை, அறநெறியை வலியுறுத்துபவை. சிறப்புமிக்க அவரது ஆன்மிகப் பொன்மொழிகள், எந்தவொரு இக்கட்டானச் சூழலிலும் தன்னம்பிக்கையை அதிகரிப்பவை.

அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொன்மொழிகள் இதோ உங்கள் பார்வைக்காக...

*எது தானம் - யாரிடமும் எதையும், கேட்காமல் இருப்பதே சிறந்த தானம்.

*யார் நண்பன் - நம்மை எந்த ஒரு சிறிய பாவத்தையும் செய்யவிடாமல் தடுப்பவனே நல்ல நண்பன்.

*எது அலங்காரம் - ஒழுக்கமாக நடந்துகொள்வதே, ஒவ்வொருவரின் வாழ்விற்கும் அலங்காரம்.

*எது வாக்கியத்திற்கு அலங்காரம் - சத்தியமான வார்த்தைகள்.

*மின்னல் போல் தோன்றி மறைவது- தீயவர்களின் நட்பு.

*மனிதனுக்கு பாக்கியம் எது? - ஆரோக்கியமான வாழ்க்கை.

*யார் முழுமையானவன் - நன்மக்கள் பெற்றவன்

*கடினமான காரியம் எது? - மனதை அடக்கி வைப்பது.

மேலும் செய்திகள்