< Back
ஆன்மிகம்
கஜூராஹோ வியப்பூட்டும் சிற்பம்
ஆன்மிகம்

கஜூராஹோ வியப்பூட்டும் சிற்பம்

தினத்தந்தி
|
26 July 2022 6:08 PM IST

மத்திய பிரதேசம் சத்தர்பூர் மாவட்டம் ஜான்சிக்கு தென்கிழக்கே அமைந்துள்ளது, கஜூராஹோ நினைவுச்சின்ன தொகுதி.

சந்தேல வம்சத்து அரசர் களால், கி.பி.885-ம் ஆண்டுக்கும் கி.பி. 1050-ம் ஆண்டுக்கும் இடையில் கட்டப்பட்டது. இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள சிற்பங்கள் பலவும் உலகப்புகழ்பெற்றவை. அவற்றில் ஒரு சிற்பத்தைத்தான் இங்கே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். தன்னுடைய கண்ணுக்கு மை தீட்டும் ஒரு பெண்ணின் சிற்பம், அதன் கீழே மற்றொரு பெண், நவீன ரக கைப்பையை தொங்கவிட்டிருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்ற நவநாகரீகம் இருந்திருக்குமோ என்ற வியப்பூட்டும் உணர்வைத் தருகிறது, இந்தச் சிற்பம்.

மேலும் செய்திகள்