< Back
ஆன்மிகம்

ஆன்மிகம்
காரிய சித்தி மாலை

30 Aug 2022 4:21 PM IST
விநாயகர் சதுர்த்தி அன்று, விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்தி மாலை போன்ற பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம். இதில் எடுத்த செயலை வெற்றி பெறச் செய்யும் தனிச்சிறப்புடையது ‘காரிய சித்தி மாலை’.
கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இந்தத் துதியை, விநாயகர் முன்பு அமர்ந்து, உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பம் எளிதில் நிறைவேறும். இந்தப் பாடலை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) பாடுபவர்களின், நினைத்த காரியங்கள் கைகூடும். அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும். தொடர்ந்து எட்டு நாட்கள் இதனை பாராயணம் செய்து வந்தால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி அன்று மட்டும், எட்டுமுறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததிகள் கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம்.