< Back
ஆன்மிகம்
காரைக்கால் சேத்தூர் மகா மாரியம்மன் கோவில் தீமிதித் திருவிழா பூச்சொரிதல் உற்சவத்துடன் துவங்கியது
ஆன்மிகம்

காரைக்கால் சேத்தூர் மகா மாரியம்மன் கோவில் தீமிதித் திருவிழா பூச்சொரிதல் உற்சவத்துடன் துவங்கியது

தினத்தந்தி
|
30 May 2023 3:27 PM IST

காரைக்கால் திருநள்ளாறை அடுத்த சேத்தூர் மகா மாரியம்மன் கோவில் தீமிதித் திருவிழா, பூச்சொரிதல் உற்சவத்துடன் துவங்கியது.

காரைக்கால்

காரைக்கால் திருநள்ளாறை அடுத்த சேத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோவிலில் ஆன்டுதோறும் நடைபெறும் தீமிதித் திருவிழா, இன்று பூச்சொரிதல் உற்சவத்துடன் துவங்கியது. பூச்சொரிதல் நிகழ்ச்சியை முன்னிட்டு, மகாமாரியம்மன் கோவிலிருந்து கரகம், மங்கள வாத்தியங்கள் முழங்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பலவண்ண பூக்கள் கொண்ட தட்டுக்களுடன் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலாவாக வந்து, மீண்டும் கோவிலை சென்றடைந்தனர்.

பின்னர், மகாமாரியம்மனுக்கு பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்த வண்ண மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட மலர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவலர் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மகா மாரியம்மன் கோவில் தீமிதித் திருவிழா வரும் ஜூன் 5ந் தேதி நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்