< Back
ஆன்மிகம்
தூபங்களும்.. பலன்களும்..
ஆன்மிகம்

தூபங்களும்.. பலன்களும்..

தினத்தந்தி
|
26 July 2022 6:01 PM IST

இறைவனை வழிபடும்போது நாம் செய்யும் தீப, தூபங்கள், இறைவனின் அருளை பெற்றுத்தருவதோடு, நாம் வசிக்கும் இடங்களில் அமைதியையும் நிலவச் செய்யும்.

அப்படிப்பட்ட தூபங்களை தினமும் வீடு, கடை, தொழிற்சாலை, பாடசாலை, அலுவலகம் போன்ற இடங்களில் இறைவனை நினைத்து தூபம் இட்டாலே, அந்த இடத்தில் அமைதியும், நற்சூழலும் அமையும். சில அற்புத தூபங்களையும் அதன் பலன்களையும் இங்கே பார்ப்போம்.

சந்தனம் - தெய்வ கடாட்சம் உண்டாகும்

சாம்பிராணி - கண் திருஷ்டி நீங்கும்

ஜவ்வாது - திடீர் அதிர்ஷ்டம் கிட்டும்

அகிலி - குழந்தை பாக்கியம் உண்டாகும்.

துகில் - குழந்தைகள் அழகு, ஆரோக்கியம் பெறுவர்

துளசி - காரியத்தடை, திருமணத்தடை அகலும்

தூதுவளை - எந்நாளும் வீட்டில் தெய்வங்கள் அருள் புரியும்

வலம்புரிக்காய் - பூத கணங்களின் ஆசி கிடைக்கும்

வெள்ளை குங்கிலியம் - தீய சக்திகள் விலகும்

வெண்கடுகு - பகை, எதிர்ப்பு மறையும்

நாய்கடுகு - துரோகிகள் நம்மை விட்டு நீங்குவர்

மருதாணி விதை - பில்லி, சூனியம் அகலும்

கரிசலாங்கண்ணி - மகான்கள் அருள் கிட்டும்

வேப்பம்பட்டை - ஏவலும், பீடையும் நீங்கும்

நன்னாரி வேர் - ராஜவசியம் உண்டாக்கும்

வெட்டிவேர் - சகல காரியங்களும் சித்தியாகும்

வேப்ப இலை தூள் - சகலவித நோய்களும் நீங்கும்

மருதாணி இலை தூள் - லட்சுமி கடாட்சம் உண்டாகும்

அருகம்புல் தூள்- சகல தோஷமும் விலகும்

மேலும் செய்திகள்