< Back
ஆன்மிகம்
சின்ன-காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் பக்தர்கள் ரூ.3¾ லட்சம் உண்டியல் காணிக்கை
ஈரோடு
ஆன்மிகம்

சின்ன-காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் பக்தர்கள் ரூ.3¾ லட்சம் உண்டியல் காணிக்கை

தினத்தந்தி
|
14 Jun 2023 3:33 AM IST

சின்ன-காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் பக்தர்கள் ரூ.3¾ லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தியிருந்தனா்.

ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் அதன் வகையறாவான சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி தொடங்கியது. இந்த திருவிழா ஏப்ரல் மாதம் 9-ந் தேதி மறுபூஜையுடன் நிறைவடைந்தது. பெரிய மாரியம்மன் கோவிலில் வைக்கப்பட்டு உள்ள உண்டியல்கள் ஏப்ரல் மாதம் 13-ந் தேதி திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

இந்தநிலையில் சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில், பக்தர்கள் மொத்தம் ரூ.3 லட்சத்து 80 ஆயிரமும், 7 கிராம் 700 மில்லி தங்கமும், 230 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்