< Back
ஆன்மிகம்

ஆன்மிகம்
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2¼ கோடி

20 Dec 2023 2:17 AM IST
பழனி முருகன் கோவிலில் உண்டியல்கள் நிரம்பியவுடன் அதில் உள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்படுவது வழக்கம்.
பழனி,
பழனி முருகன் கோவிலில் உண்டியல்கள் நிரம்பியவுடன் அதில் உள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி கடந்த மாதம் 30-ந் தேதி மற்றும் கடந்த 1-ந் தேதி பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன.இந்தநிலையில் மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் கடந்த 18 நாட்களில், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 35 லட்சத்து 19 ஆயிரத்து 429 கிடைத்தது. இதேபோல் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 431 செலுத்தப்பட்டிருந்தது.