< Back
ஆன்மிகம்
ஈரோடு மண்டலத்தில் உள்ள149 கோவில்களில் திருப்பணிக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு
ஈரோடு
ஆன்மிகம்

ஈரோடு மண்டலத்தில் உள்ள149 கோவில்களில் திருப்பணிக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு

தினத்தந்தி
|
7 Jan 2023 3:04 AM IST

ஈரோடு மண்டலத்தில் உள்ள 149 கோவில்களில் திருப்பணிக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் ஈரோடு மண்டல இணை ஆணையாளர் பரஞ்சோதி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஈரோடு மண்டலத்தில் உள்ள வருவாய் இல்லாத சிறிய கோவில்களாக இருக்கும் ஆதிதிராவிடர் பகுதி மற்றும் கிராம கோவில்களில் திருப்பணி மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிதி உதவி வழங்கப்படுகிறது. அதன்படி ஈரோடு மண்டலத்தில் உள்ள ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 149 கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 35 கோவில்கள், ஆதிதிராவிடர் பகுதியில் 50 கோவில்களும், நாமக்கல் மாவட்டத்தில் 64 கோவில்கள் என மொத்தம் 149 கோவில்களுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.2 கோடியே 98 லட்சம் நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
மேலும் செய்திகள்