< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
|8 April 2024 1:56 PM IST
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி தேரோட்டத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருச்சி,
பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனித் திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
6ம் திருநாளான இன்று விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட இரண்டு பிரம்மாண்டமான திருத்தேரில் சுவாமியும் அம்பாளும் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.
அகிலாண்டேஸ்வரி தாயாரின் தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 வீதிகளிலும் வலம்வந்து பின்னர் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.