< Back
ஆன்மிகம்
முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை
திருப்பூர்
ஆன்மிகம்

முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை

தினத்தந்தி
|
23 July 2022 9:55 PM IST

முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி கிருத்திகை

ஆடி கிருத்திகை தினம் முருகனுக்கு உகந்த தினமாகும். அன்றைய தினம் விரதமிருந்து முருகனை வழிபட்டால், குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. மாதந்தோறும் வரும் கிருத்திகை தினங்களை விட ஆடி மாதம் கிருத்திகை மகத்துவம் மிக்கது. ஆடி கிருத்தியை முன்னிட்டு முருகன் கோவில்களில் நேற்று பக்தர்கள் குவிந்தனர்.

சிவன்மலை முருகன் கோவிலில் காலை 6 மணிக்கு சிறப்பு பூஜையும், மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. இதில் முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட்டு சிறப்பு அபிஷேகமும், அடி கிருத்திகை பூஜையும் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் கோவிலை சுற்றி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டனர். பின்னர் மாலை 6 மணிக்கு தங்கத்தோர் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அலுவலர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

வெள்ளகோவில்

வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில், சோழீஸ்வரர் ஆலயம், கண்ணபுரம் விக்ரம சோழீஸ்வரர்ஆலயம், மயில்ரங்கம் வைத்தியநாத சாமி கோவில், உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில், எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில்களில் ஆடிக்கிருத்திகையொட்டி முருகனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்