< Back
ஆன்மிகம்
ஆடிப்பூர விழாவையொட்டி கமலாம்பாளுக்கு வளையல் அலங்காரம்
திருவாரூர்
ஆன்மிகம்

ஆடிப்பூர விழாவையொட்டி கமலாம்பாளுக்கு வளையல் அலங்காரம்

தினத்தந்தி
|
1 Aug 2022 5:56 PM GMT

ஆடிப்பூர விழாவையொட்டி கமலாம்பாளுக்கு வளையல் அலங்காரம்

திருவாரூரில் தியாகராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுேதாறும் ஆடிப்பூர விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மாதம் 23-ந்தேதி கமலாம்பாள் சன்னதியில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி பல்வேறு வாகங்களில் அம்மன் வீதி உலா நடந்தது. நேற்றுமுன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் நிறைவாக ஆடிப்பூரம் வெள்ளை சாத்தல், பூரம் கழித்தல் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. அப்போது கமலாம்பாளுக்கு ஆயிரகணக்கான வளையல்களால் அலங்கரிக்கப்பட்டது. இதனையடுத்து அம்மன் வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று(செவ்வாய்க்கிழமை) விடையாற்றி உற்சவத்துடன் கொடி இறக்கப்பட்டு ஆடிப்பூர விழா நிறைவு பெறுகிறது.

மேலும் செய்திகள்