< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
செந்தூர விநாயகர்
|28 Jun 2022 5:51 PM IST
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, மோதி துங்ரி மலை மற்றும் மோதி துங்ரி கோட்டை. இந்த மலைக் கோட்டையின் அடிப்பகுதியில் விநாயகருக்காக நிறுவப்பட்டதுதான், ‘மோதி துங்ரி கோவில்.’
இந்தக் கோவிலில் உள்ள விநாயகர் சிலையானது, உதய்ப்பூரில் இருந்து மதோ சிங் என்ற மன்னருடன் இங்கு வந்த சேத் ஜெய் ராம் பாலிவால் என்பவரால் இங்கு கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயமும் பாலிவால் மேற்பார்வையில்தான் கட்டப்பட்டிருக்கிறது.
1761-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் பணிகள் அனைத்தும் வெறும் 4 மாதங்களில் முடிந்திருக்கிறது என்பது வியப்புக்குரியதாகும். செந்தூர நிறத்தில் காட்சியளிக்கும் இந்த விநாயகரின் தும்பிக்கை வலது புறமாக வளைந்திருக்கிறது. இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு, திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலைப்போன்று, லட்டுதான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மோதி துங்ரி கோட்டை வளாகத்தில் ஒரு சிவலிங்கமும் காணப்படுகிறது. இந்த சிவபெருமான், மகாசிவராத்திரி காலத்தில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே காட்சி தருவார்.