< Back
ஆன்மிகம்
திருமலை கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற பவுர்ணமி கருட சேவை
ஆன்மிகம்

திருமலை கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற பவுர்ணமி கருட சேவை

தினத்தந்தி
|
11 Sept 2022 12:34 AM IST

திருமலை கோயிலில் பவுர்ணமி கருட சேவை வெகுசிறப்பாக நடைபெற்றது.

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று கருடவாகன சேவை நடைபெறுகிறது. இந்நிலையில் ஏழுமலையானின் கருடசேவை கோவில் மாடவீதிகளில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது.

சர்வாலங்கார அலங்காரத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி கருட வாகனத்தில் கோயில் மாட வீதிகளில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது மாடவீதிகளில் கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கோஷங்கள் எழுப்பி வழிபாடு நடத்தினர்.

மேலும் செய்திகள்