< Back
ஆன்மிகம்
நாகப்பட்டினம்
ஆன்மிகம்
புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர்பவனி
|26 Jun 2022 8:04 PM IST
புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர்பவனி நடந்தது.
வெளிப்பாளையம்:
நாகை முதலாவது கடற்கரை சாலையில் புனித அந்தோணியர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுேதாறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கடந்த 22-ந்தேதி ஜெபமாலை, பிரார்த்தனை, நவநாள் ஜெபம், திருப்பலி ஆகியவை நடந்தது. 23-ந்தேதி இரவு மின் அலங்காரத்தில் தேர்பவனியும், 24-ந்தேதி இரவு ஜெபமாலையுடன் தேர்பவனியும் நடந்தது. நேற்றுமுன்தினம் இரவு பெரிய தேர்பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கொடியிறக்கம், நவநாள்ஜெபம் மற்றும் திருப்பலியுடன் ஆண்டு திருவிழா நிறைவுபெற்றது.