< Back
ஆன்மிகம்
ஈரோடு வைராபாளையம்  பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ஈரோடு
ஆன்மிகம்

ஈரோடு வைராபாளையம் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

தினத்தந்தி
|
29 Oct 2022 3:12 AM IST

ஈரோடு வைராபாளையம் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

ஈரோடு வைராபாளையம் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

பெரிய மாரியம்மன்

ஈரோடு வைராபாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற செல்வ கணபதி, பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த சில மாதங்களாக புனரமைப்பு பணிகள் நடந்து வந்தது. அனைத்து பணிகளும் முடிவடைந்ததை தொடர்ந்து கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த 26-ந்தேதி காலை 6.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், நவக்கிரக நாயகர் ஹோமம், தனபூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

அதைத்தொடர்ந்து அன்று பகல் 11 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீர் எடுத்து வந்தனர். பின்னர் மாலையில் பெண்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

மாலை 6 மணிக்கு முதற்கால யாக பூஜை நடந்தது.

கும்பாபிஷேகம்

நேற்று முன்தினம் காலை 2-ம் கால யாக பூஜையும், துவார பூஜை, உபவாச வழிபாடும், மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும் நடந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு 4-ம் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் காலை 8.15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

அப்போது சிவாச்சாரியார்கள் செல்வ கணபதி, பெரிய மாரியம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டது. இதையொட்டி பெரிய மாரியம்மன் மற்றும் செல்வ கணபதி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்