< Back
ஆன்மிகம்
ஈரோடு வெட்டுக்காட்டுவலசுசைவ மாரியம்மன் கோவில் குண்டம் விழா;ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்
ஈரோடு
ஆன்மிகம்

ஈரோடு வெட்டுக்காட்டுவலசுசைவ மாரியம்மன் கோவில் குண்டம் விழா;ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்

தினத்தந்தி
|
4 Jan 2023 10:51 PM GMT

ஈரோடு வெட்டுக்காட்டுவலசு சைவ மாரியம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.

ஈரோடு வெட்டுக்காட்டுவலசு சைவ மாரியம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.

சைவ மாரியம்மன்

ஈரோடு வெட்டுக்காட்டு வலசு பகுதியில் பிரசித்தி பெற்ற சைவ மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் குண்டம் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 27-ந் தேதி காலை 8 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

அதைத்தொடர்ந்து அன்று இரவு 7 மணிக்கு, கோவில் முன்பு கம்பம் நடப்பட்டு, குண்டம் இறங்கும் பக்தர்கள் கையில் காப்பு கட்டிக்கொண்டனர். கடந்த 29-ந்தேதி இரவு பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும், 2-ந்தேதி இரவு அக்னி கபாலம் ஊர்வலமும் நடந்தது. நேற்று முன்தினம் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீர் எடுத்து வந்தனர். அதன் பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.

குண்டம் விழா

முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நேற்று நடந்தது. முன்னதாக குண்டத்துக்கு கோவில் தலைமை பூசாரி சிறப்பு பூஜை செய்து முதலில் தீ மிதித்தார். அவரை தொடர்ந்து காப்பு கட்டியவர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கினர். சிலர் கைக்குழந்தையுடன் தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.

அதைத்தொடர்ந்து பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். பின்னர் மாலையில் அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.

Related Tags :
மேலும் செய்திகள்