< Back
ஆன்மிகம்
துரியோதனன் கோவில்
ஆன்மிகம்

துரியோதனன் கோவில்

தினத்தந்தி
|
29 Sept 2023 5:10 PM IST

உத்தரகாண்ட் மாநிலம், உத்தரவாசி மாவட்டத்தில் துரியோதனனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம், உத்தரவாசி மாவட்டத்தில் உள்ளது, ஜகோல் என்ற கிராமம். இங்கு மகாபாரத இதிகாசத்தில் சொல்லப்பட்டுள்ள, கவுரவர்களின் வரிசையில் முதன்மையானவனான துரியோதனனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கவுரவர்களைத் தங்கள் மூதாதையர்களாகக் கொண்டவர்கள். அவர்கள் தான் இந்த ஆலயத்தை துரியோதனனுக்காக கட்டியதாக சொல்லப்படுகிறது.

ஒரு முறை துரியோதனன் இந்தப் பகுதியைத் தாண்டிச் சென்ற போது, இதன் இயற்கையான அழகில் மயங்கினான். அங்குள்ள உள்ளூர் தெய்வமான மஹசு என்பவரிடம், இமயமலையை ஒட்டி தனக்கென ஒரு பள்ளத்தாக்கு வேண்டும் என்று வேண்டினான். அதற்கு அந்த தெய்வம், 'தான் இடம் அளிப்பதாகவும், இந்தப் பகுதி மக்களை நீ காக்க வேண்டும்' என்று கூறியது. அந்த வாக்கின் படி துரியோதனனுக்கு வழங்கப்பட்ட பள்ளத்தாக்கில்தான், அவனுக்கான ஆலயமும் அமைந்திருக்கிறது. மகாபாரத யுத்தத்தில் துரியோதனன் இறந்தபோது, அவனுக்காக இப்பகுதி மக்கள் கண்ணீர் விட்டனர். அந்த நீர் பெருகி, ஏரியாக உருவானது. அதன் பெயர் 'தமஸ்'. இந்த வார்த்தைக்கு 'துன்பம்' என்று பெயர். இங்கு துரியோதனன் சிலையை வைத்து வழிபடும் வழக்கம் இப்போது இல்லை. ஆனால் அங்கு சிவலிங்க வழிபாடு இருக்கிறது.

மேலும் செய்திகள்