< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை; சென்னை இஸ்லாமிய தம்பதி காணிக்கை
|21 Sept 2022 8:22 AM IST
சென்னையை சேர்ந்த இஸ்லாமிய தம்பதியினர் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1 கோடியே 2 லட்சம் நன்கொடைவழங்கினர்.
திருமலை:
சென்னையை சேர்ந்த சுபினாபானு மற்றும் அப்துல் கனி ஆகியோர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1 கோடியே 2 லட்சம் நன்கொடை வழங்கினர். இதற்கான காசோலையை கோவிலில் உள்ள ரங்கநாயகுலா மண்டபத்தில், தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டியிடம் வழங்கினர்.
இதில், எஸ்.வி.அன்னப்பிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ.15 லட்சம், திருமலையில் சமீபத்தில் நவீனப்படுத்தப்பட்ட பத்மாவதி ஓய்வறைக்கு புதிய பர்னிச்சர்கள் வாங்க ரூ.87 லட்சம் மற்றும் சமையல் பாத்திரங்கள் வழங்கினர்.