< Back
ஆன்மிகம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு தங்க பாதம் நன்கொடை
ஆன்மிகம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு தங்க பாதம் நன்கொடை

தினத்தந்தி
|
12 Sept 2022 4:57 AM IST

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலுக்கு ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் தங்க பாதங்களை காணிக்கையாக வழங்கினார்.

திருமலை:

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலுக்கு ஐதராபாத்தை சேர்ந்த சத்யநாராயணா என்ற பக்தர் தங்க பாதங்களை காணிக்கையாக வழங்கினார். கோவிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்தின்போது உற்சவமூர்த்தி வெங்கடேஸ்வர சாமி அலங்காரத்திற்கு இந்த பாதங்கள் வழங்கப்பட்டன.

85 கிராம் எடை கொண்ட இந்த பாதங்களின் மதிப்பு ரூ.4 லட்சம் என பக்தர் கூறினார். தங்கபாதங்களை கோவில் கூடுதல் அதிகாரி பிரபாகர் ரெட்டி, அர்ச்சகர் பாபுசுவாமி, கண்காணிப்பாளர் சேஷகிரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்