< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் தட்சணாமூர்த்தி சிலை கண்டெடுப்பு
|30 July 2022 7:56 AM IST
விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில் அன்னதான கூடம் கட்டும் பணியின் போது 4 அடி உயரமுள்ள ஸ்ரீ தட்சணாமூர்த்தி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா விரிஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற மார்க்க பந்தீஸ்வரர் கோயில் உள்ளது. கோயிலில் தினசரி மதிய உணவு கோயில் வளாகத்திலேயே வழங்கப்பட்டு வருகின்றது. கோயில் அருகே அதற்கென தனியாக ஒரு அன்னதான கூடம் கட்டுவதற்கான கடக்கால் தோண்டும் பணி நேற்று காலை நடந்தது.
அப்போது திடீரென ஒரு சாமி சிலை பள்ளத்தில் இருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அதை எடுத்து சுத்தம் செய்து பார்த்தபோது சுமார் 4 அடி உயரமுள்ள ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிலை என தெரியவந்தது. இந்த சிலை கருங்கல்லால் செய்யப்பட்டுள்ளது.
கோயில் செயல் அலுவலர் சங்கர் தட்சணாமூர்த்தி சிலையை பாதுகாப்பாக வைத்து தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றார். சிலை கண்டெடுக்கப்பட்ட தகவல் அந்தப் பகுதியில் பரவியதால் பக்தர்கள் சிலையை வந்து பார்த்து வணங்கி வருகின்றனர்.