< Back
ஆன்மிகம்
ஆடி அமாவாசையையொட்டி அதிகாலை முதல் சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
ஆன்மிகம்

ஆடி அமாவாசையையொட்டி அதிகாலை முதல் சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
4 Aug 2024 2:38 PM IST

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

விருதுநகர்,

ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் சித்தர் மலை என போற்றப்படும் சதுரகிரி மலை உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை 3 மணி முதல் சுந்தர மகாலிங்கம் சாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்கள் வசதிக்காக சதுரகிரி மலைப்பாதையில் 5 இடங்களில் குடிநீர் தொட்டியும், 4 இடங்களில் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் சாமி தரிசனம் செய்வதற்கு கூடுதலாக நேரம் ஒதுக்க வேண்டும் என சமூக ஆர்வவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



மேலும் செய்திகள்