ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் ராகு கேது பூஜையில் ஈடுபட்ட ரஷ்ய நாட்டு பக்தர்கள்
|திருப்பதி:
திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜைகளில் ஈடுபட சிறப்பு வாய்ந்த தலமாக விளங்குகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி வெளிநாட்டினரும் இப்பூஜைகளில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் இன்று ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு ரஷ்ய நாட்டினர் சுமார் 25க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்தவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக ரஷ்ய நாட்டு பக்தர்கள் ராகு கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. ரஷ்ய நாட்டினர் கோயிலில் வலம் வந்து பார்த்தவர்கள் கோயிலில் அமைக்கப்பட்டிருக்கும் சிற்ப கலைகள் மிகவும் அற்புதமாக அழகாக வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மிகப் பழமை வாய்ந்த கோயிலாக இருப்பதாகவும் கோயிலுக்குள் மன அமைதியையும் ஆன்மீகத்தை உருவாக்கும் வகையிலும் கோயில் இருப்பதாக தெரிவித்தனர்.