< Back
ஆன்மிகம்
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் தேவனாம்பட்டு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு யாகம்
ஆன்மிகம்

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் தேவனாம்பட்டு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு யாகம்

தினத்தந்தி
|
27 July 2022 6:44 PM IST

உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் கொரோனாவை நாட்டை விட்டு விரட்டவும் தேவனாம்மட்டு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு யாகம் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை நகரை ஒட்டி அமைந்துள்ள தேவனாம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு சிவசுப்பிரமணியசாமி திருக்கோவிலில் உள்ளது.

இங்கு உலக நன்மைக்காகவும், உலகத்தில் இருந்து கொரோனாவை முற்றிலும் விரட்டவும், நாடு முழுவதும் நல்ல மழை பொழிய வேண்டி, 108 வகையான சிறப்பு மூலிகைகள் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு யாகம் செய்யப்பட்டது.

இதில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டக்கா யூகி ஓஷி தலைமையில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும் நடைபெற்றது.

இந்த யாகத்தில் தேவனாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காக வேண்டி சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு யாகத்தை கோவில் குருக்கள் சந்தோஷ் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்து இருந்தனர். முடிவில் பொது மக்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்