< Back
ஆன்மிகம்
ஆடி பெருக்கு: பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ஆன்மிகம்

ஆடி பெருக்கு: பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
3 Aug 2022 1:20 PM IST

சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலில் இன்று ஆடி 18 என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவிலே இருந்தது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில். இந்த கோயிலில் அரசு விடுமுறை நாட்கள், வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை மற்றும், செவ்வாய்க்கிழமை, பண்டிகை தினங்கள், அமாவாசை, பௌர்ணமி உட்பட பல்வேறு விசேஷ நாட்கள் பக்தர்கள் கூட்டம் அதிக அளவிலே இருக்கும்.

இன்று ஆடி 18 என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவிலே இருந்தது. அதிகாலை 5 மணியிலிருந்து சத்தியமங்கலத்தில் இருந்தும் அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கார்களிலும், மோட்டார் சைக்கிளிலும், பேருந்துகளிலும் வந்து வரிசையில் நின்று கொண்டார்கள். காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் சூடம் ஏற்றி ஆராதனை செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனாக கு‌ண்டம் அருகில் தீபங்களை ஏற்றி அம்மனை வணங்கியும், அதுபோல உப்பு, மிளகு கலந்ததை தூவியும் சூடம் ஏற்றியும் அம்மனை வணங்கினார்கள்.

இன்று விசேஷ தினம் என்பதால் சத்தியமங்கலத்தில் இருந்த சிறப்பு பேருந்துகள் விடப்பட்டு இருந்தது. கோயில் சார்பாக பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் பாதுகாப்பு பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்