< Back
ஆன்மிகம்
சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
ஆன்மிகம்

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

தினத்தந்தி
|
20 March 2024 8:37 AM IST

எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, பங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்துள்ளனர். பக்தர்கள் இரவில் கோவிலில் தங்குவதற்கு அனுமதி கிடையாது. கோடை காலம் என்பதால் எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

பக்தர்கள் சாமி தரிசனம் செய்து முடித்தவுடன் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு இறங்கி விட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். சிறப்பு பூஜைக்கான முன்னேற்பாடு மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்