< Back
ஆன்மிகம்
சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி
ஆன்மிகம்

சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி

தினத்தந்தி
|
6 Dec 2023 10:29 AM IST

பக்தர்கள், மலைப்பகுதியில் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம் மற்றும் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு வருகிற 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பக்தர்கள், மலைப்பகுதியில் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை. கோவிலுக்கு நடந்து செல்லும் மலைப்பாதைகளில் உள்ள ஆற்றுப்பகுதியில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக மழை பெய்தாலோ, ஆற்றுப்பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலோ பக்தர்களின் பாதுகாப்பை கருதி, மலையேறுவதற்கான அனுமதி ரத்து செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்