< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
கொட்டி கிடந்த விபூதியில் பதிந்த பாதம் - மெய்சிலிர்த்து போன சாய்பாபா பக்தர்கள்
|23 Sept 2022 10:30 AM IST
வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஷீரடி சாய்பாபாவின் கூட்டு பிரார்த்தனை மையத்தில் விபூதியில் பதிந்த கால்தடத்தை பக்தர்கள் ஆச்சரியத்துடன் வணங்கி சென்றனர்.
சென்னை:
சென்னை வளசரவாக்கம் பகுதியில் ஷீரடி சாய்பாபாவின் கூட்டு பிரார்த்தனை மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பக்தர்கள் கூட்டு பிரார்த்தனைக்காக சாய்பாபா இருக்கும் அறையை திறந்துள்ளனர். அப்போது, தரையில் அதிகளவு விபூதி சிதறி இருந்தது.
மேலும் விபூதியில் கால்தடம் போன்ற ஒன்று இருந்ததை கண்ட அவர்கள், அது சாய்பாபாவின் கால்தடம் என்று கூறி, பக்தி பரவசத்துடன் வணங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி குடியிருப்புவாசிகள், விபூதியில் இருந்த கால்தடத்தை ஆச்சரியத்துடன் வணங்கி சென்றனர்.