< Back
ஆன்மிகம்
தீபாவளியில் பழனி ஆண்டவரை பார்க்க அலைமோதும் மக்கள் கூட்டம்
ஆன்மிகம்

தீபாவளியில் பழனி ஆண்டவரை பார்க்க அலைமோதும் மக்கள் கூட்டம்

தினத்தந்தி
|
24 Oct 2022 3:30 PM IST

தீபாவளியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பழனி:

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அமைந்துள்ள முருகன் கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் மேற்கொள்வர். மேலும் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற நாளை தொடங்குகிறது.

கந்தசஷ்டி விழா தொடங்கும் நாளை மாலை 5.21 மணி முதல் 6.23 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் பகல் 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்கிறது. பின்பு கந்தசஷ்டி திருவிழா காப்புக்கட்டு நடைபெறுகிது. பிற்பகல் 2.30 மணிக்கு மலைக்கோவில் மற்றும் உபகோவில்கள் அனைத்தும் நடை சாத்தப்படும். எனவே நண்பகல் 12.30 மணிக்கு பிறகு பக்தர்கள் யாரும் படிப்பாதை, வின்ச், ரோப்கார் ஆகியவற்றின் மூலம் செல்ல அனுமதி இல்லை. சூரியகிரகணம் முடிந்த பின்பு 7 மணிக்கு மேல் சம்ரோக்ஷன பூஜை நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும், பக்தர்களின் பாதுகாப்பிற்காக போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்