< Back
ஆன்மிகம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.14.72 லட்சம் உண்டியல் மூலம் வசூல்
ஆன்மிகம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.14.72 லட்சம் உண்டியல் மூலம் வசூல்

தினத்தந்தி
|
11 March 2024 6:56 PM IST

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.14.72 லட்சம் உண்டியல் மூலம் வசூலாகியுள்ளது.

மணவாளக்குறிச்சி,

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு நிரந்தர உண்டியல் மற்றும் திறந்த வார்ப்பு கடந்த 7 ந் தேதியிலிருந்து 11 ந் தேதி வரையான ஐந்து நாட்களுக்கான காணிக்கை இன்று கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், உதவி ஆணையர் தங்கம், அறங்காவலர்குழு உறுப்பினர் ராஜேஷ், கண்காணிப்பாளர் சண்முகம் பிள்ளை, ஆனந்த் மற்றும் ஆனந்தன், ஆய்வாளர் செல்வி, கோயில் ஸ்ரீகாரியம் செந்தில் குமார், மராமத்து பொறியாளர் ஐயப்பன் மற்றும் கோயில் ஊழியர்கள், சுயஉதவிக்குழு பெண்கள், பொதுமக்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.14,71,999 ரொக்கமாகவும், 2 கிராம் தங்கம், 14.600 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களும் கிடைக்கப்பெற்றன.

மேலும் செய்திகள்