< Back
ஆன்மிகம்
கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம்
ஆன்மிகம்

கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம்

தினத்தந்தி
|
28 Feb 2024 6:56 PM IST

தேரோட்டத்தை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவை:

கோவை புகழ்பெற்ற கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் அம்மன் திருவீதி உலா நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. காலை 5 மணிக்கு அம்மன் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கவுமார மடாலயம் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், தர்மராஜா கோவில் பீடத்தைசேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சுவாமி ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் பவனி வந்தது. சாலைகளில் இருபுறமும் திரண்டு பக்தர்கள் வழிபட்டதுடன், மாடிகளிலும் நின்று தேரோட்டத்தை கண்டுகளித்தனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு தேர் செல்லும் வீதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்