< Back
ஆன்மிகம்
திருவாரூர்
ஆன்மிகம்
சேரன்குளம் வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம்
|27 Sept 2023 12:45 AM IST
சேரன்குளம் வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம் நடந்தது.இதில் திரளான பக்தா்கள் கலந்து ெகாண்டனா்.
வடுவூர்;
மன்னார்குடி அருகே உள்ள சேரன்குளம் வெங்கடாஜலபதி கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக கோவிலில் பிரம்மோற்சவ விழா நடந்தது. விழாவின் நிறைவாக சீனிவாசப்பெருமாள் பூதேவி மற்றும் ஸ்ரீ தேவி சமேதராக எழுந்தருளி கோவிலை வலம் வந்தார். பின்னர் பெருமாளை தாயார்களுடன் தேரில் எழுந்தருளச்செய்து வேத பாராயணங்களை பாடி தீட்சதர்கள் அர்ச்சனை செய்தனர்.தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தா்கள் பெருமாளை வழிபட்டனர்.