< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
|25 Jun 2024 10:35 AM IST
பிரம்மோற்சவ விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் வாகன சேவைகள் நடைபெற்றன.
திருப்பதி:
திருப்பதி மாவட்டம் அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் கடந்த 17-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கி விமரிசையாக நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் வாகன சேவைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வாக 20-ம் தேதி கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இந்நிலையில், பிரம்மோற்சவத்தின் சிகர நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பிரசன்ன வெங்கடேஸ்வரர், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டு தேர் இழுத்தனர். பிரம்மோற்சவ விழா இன்றுடன் நிறைவடைகிறது.