< Back
ஆன்மிகம்
கார்த்திகை மாதம் பிறப்பு:  அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்
ஈரோடு
ஆன்மிகம்

கார்த்திகை மாதம் பிறப்பு: அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்

தினத்தந்தி
|
17 Nov 2022 8:50 PM GMT

கார்த்திகை மாத பிறப்பையொட்டி ஈரோட்டில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

கார்த்திகை மாத பிறப்பையொட்டி ஈரோட்டில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

கார்த்திகை மாத பிறப்பு

சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜையில் கலந்து கொள்வதற்காக கார்த்திகை மாதம் 1-ந்தேதி ஏராளமான பக்தர்கள் துளசி மணி மாலை அணிந்து விரதம் தொடங்குவது வழக்கம். அதன்படி நேற்று கார்த்திகை மாத பிறப்பையொட்டி ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரத்தை தொடங்கினார்கள்.

இதையொட்டி ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் நேற்று அதிகாலையில் சிறப்பு பூஜை நடந்தது.

மாலை அணிந்த பக்தர்கள்

அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு கோவில் பூசாரி, மாலை அணிவித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாலை அணிந்து கொண்டனர்.

இதேபோல் பவானி, கோபி, சத்தி, பெருந்துறை, கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானிசாகர் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரத்தை தொடங்கினர்.

மேலும் ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று பல்வேறு வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி கார்த்திகை மாதத்தை பொதுமக்கள் வரவேற்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்