< Back
ஆன்மிகம்
ஈரோடு
ஆன்மிகம்
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் ரூ.20 லட்சம் உண்டியல் காணிக்கை
|15 Jun 2023 3:28 AM IST
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் ரூ.20 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தியிருந்தனா்.
பவானி
பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் மற்றும் அதன் துணைக்கோவில்களான பழனியாண்டவர் கோவில், சின்னக்கோவில் ஆகிய கோவில்களின் உண்டியல் 3 மாதங்களுக்கு பிறகு நேற்று திறந்து காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இந்து அறநிலையத்துறை உதவி ஆணையாளர் சுவாமிநாதன் தலைமையில் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ரூ.19 லட்சத்து 97 ஆயிரத்து 927-யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும் 54 கிராம் தங்கமும், 359 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.