< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
திருப்பதியில் பாஷ்யகார உற்சவம் தொடங்கியது
|3 May 2024 2:13 PM IST
ராமானுஜர் பிறந்த ஆருத்ரா நட்சத்திர நாளில் பாஷ்யகார சாத்துமோரா நடைபெறும்.
ராமானுஜர் பிறந்த சித்திரை மாதம் ஆருத்ரா நட்சத்திரத்தை (திருவாதிரை) முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி திருமலையில் பாஷ்யகார உற்சவம் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பாஷ்யகார உற்சவம் இன்று தொடங்கியது. வரும் 21-ம்தேதி வரை மொத்தம் 19 நாட்களுக்கு இந்த உற்சவம் நடைபெறும்.
முக்கிய நிகழ்வாக, ராமானுஜர் பிறந்த ஆருத்ரா நட்சத்திர நாளான 12-ம் தேதி பாஷ்யகார சாத்துமோரா நடைபெறும். அன்று மாலை சகஸ்ரதீபலங்கார சேவைக்கு பிறகு ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமியும், ராமானுஜரும் கோவில் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.