< Back
ஆன்மிகம்
ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் பவித்ரோற்சவம் தொடங்கியது - 10-ந் தேதி வரை நடக்கிறது
ஆன்மிகம்

ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் பவித்ரோற்சவம் தொடங்கியது - 10-ந் தேதி வரை நடக்கிறது

தினத்தந்தி
|
7 Sept 2022 8:41 AM IST

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் 5 நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவம் நேற்று தொடங்கியது. வருகிற 10-ந்தேதி வரை உற்சவங்கள் நடைபெறுகிறது.

திருப்பதி:

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பவித்ரோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று பவித்ரோற்சவம் தொடங்கியது. முன்னதாக கோவில் வளாகத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் உற்சவமூர்த்திகள் உள்பட பரத்வாஜ் மகரிஷியின் உற்சவ சிலைக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.

முன்னதாக நேற்று முன்தினம் சுவாமி, அம்பாளுக்கு பயன்படுத்தும் கவசங்கள், தூப, தீப, நெய்வேத்தியங்களுக்கு பயன்படுத்தும் பொருட்கள், அலங்கார பொருட்களை கோவில் ஊழியர்கள் சுத்தப்படுத்தினர். அதனை பயன்படுத்தி நேற்று பவித்ரோற்சவத்தை தொடங்கினர்.

கோவில் வளாகத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் பன்னீர், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தம் போன்றவைகளால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. பின்னர் மகாதீபாராதனையை தொடர்ந்து நெய்வேத்தியங்களை சமர்ப்பித்தனர். வருகிற 10-ந்தேதி வரை உற்சவம் நடக்கிறது.

நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசலு மற்றும் உறுப்பினர்கள், கோவில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்