< Back
ஆன்மிகம்
விருதுநகர்
ஆன்மிகம்
தொடர் மழை: சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை..!
|9 Nov 2023 11:57 AM IST
கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலி பாறை ஓடை உள்ளிட்ட ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் உள்ளது. பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலி பாறை ஓடை உள்ளிட்ட ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, பக்தர்களின் பாதுகாப்பு கருதி மலை ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.