< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் ஐயப்பனுக்கு சொர்ண அலங்காரம்
|10 Dec 2023 5:33 AM IST
இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோவிலில் நேற்று சுவாமிக்கு 15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளில் சொா்ண அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் வாணியம்பாடி ஐயப்பன் கோவிலில், இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வருகின்றனா்.
இந்த நிலையில், கார்த்திகை மாதம் நான்காவது சனிக்கிழமையையொட்டி ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 15 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் ஆன சொர்ண அலங்காரத்தில் ஐயப்பன் அருள் பாலித்தது பக்தர்களை பரவசப்படுத்தியது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.