< Back
ஆன்மிகம்
ஈரோடு
ஆன்மிகம்
பண்ணாரி மாரியம்மன் கோவிலில்பக்தர்கள் ரூ.96 லட்சம் உண்டியல் காணிக்கை
|8 Sept 2023 4:13 AM IST
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் ரூ.96 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தியிருந்தனா்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நேற்று காலை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோவிலை சுற்றியுள்ள 20 இடங்களில் இருந்து எடுத்து வந்த உண்டியல்கள் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் செயல் அலுவலர் மேனகா, பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவியாளர் சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டன.
அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள், வங்கி அலுவலர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். பணம் ரூ.96 லட்சத்து 17 ஆயிரத்து 358-ம், தங்கம் 493 கிராமும், வெள்ளி 993 கிராமும் உண்டியல்களில் இருந்தது.