< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
தம்பி முருகனுடன் செஸ் விளையாடும் விநாயகர்...! பார்த்து ரசிக்கும் பெற்றோர் சிவன்-பார்வதி
|31 Aug 2022 3:58 PM IST
மதுரவாயலில் விநாயகரும், முருகனும் செஸ் விளையாடுவது போல் வித்தியாசமாக சிலை வைக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லி:
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தமிழகமெங்கும் விநாயகர் சிலைகள் ஆங்காங்கே வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மதுரவாயலில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையில் முருகனும், விநாயகரும் செஸ் விளையாடுவது போன்றும் அதனை அவர்களது பெற்றோர் சிவன், பார்வதி பார்ப்பது போன்று வித்தியாசமான முறையில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வகையில் செஸ் விளையாட்டு போட்டியை ஊக்குவிக்கும் விதமாக விநாயகரும், முருகனும் செஸ் விளையாடுவது போன்ற சிலை வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்த்துவிட்டு புகைப்படம் எடுத்துவிட்டு செல்கின்றனர்.