< Back
ஆன்மிகம்
சுதந்திரத்தோடு தொடர்புடையது
ஆன்மிகம்

சுதந்திரத்தோடு தொடர்புடையது

தினத்தந்தி
|
21 Jun 2022 4:43 PM IST

ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தின் போது, விதுராஷ்வதா ஆலயமும் அதில் முக்கிய பங்கு வகித்தது.

ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் போன்ற ஒரு சோகம் இங்கும் நடந்தது. ஆங்கிலேய ஆட்சியை கண்டித்து எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், 1938-ம் ஆண்டு இந்த ஆலயத்தில் நான்கு நாட்கள் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களின் கடுமையான உத்தரவின்ேபரில் அப்போது போலீஸ் அதிகாரிகள் அங்கிருந்த கூட்டத்தினர் மீது தடியடி நடத்தியுள்ளனர். பின்னர் முன்அறிவிப்பு ஏதுமின்றி துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் உள்பட 10 பேரும், ஒரு கர்ப்பிணி பெண்ணும் மரணித்தனர். 35 பேர் படுகாயம் அடைந்தனா். 'விதுராஷ்வத சோகம்' என்று அழைக்கப்படும் இந்த சம்பவம், மைசூரு மக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொள்ள தூண்டுகோலாக அமைந்தது. விதுராஷ்வத ஆலயத்தின் அருகே இந்த சோகத்தை நினைவு கூரும் வகையில் நினைவுச்சின்னமும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்