ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவில் ஆனி உத்திரப் பெரும் திருவிழா
|ஆறுமுகநேரி சோமநாத சுவாமி கோவில் ஆனி உத்திரப் பெரும் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
ஆறுமுகநேரி,
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த திருவாடுதுறை ஆதீனத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ சோமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ சோமநாத சுவாமி திருக்கோவிலில் ஆனி உத்தர பெருந் திருவிழா சிறப்பாக பத்து நாட்கள் நடைபெற்றது.
கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த திருவிழாவின் நாட்களில் காலை மற்றும் இரவில் சப்பரபவனி மற்றும் பக்தி சொற்பொழிவு, நாதஸ்வர கச்சேரிகள், தீபாராதனைகள், நடைபெற்றன.
நேற்று ஒன்பதாம் திருவிழா அன்று சுவாமி அம்பாள் பூஞ்சரப்பரபவனி நடைபெற்றது. இரவில் பஞ்சமூர்த்திகள் சப்புரப்பவனியும் நடைபெற்றது. பத்தாம் திருநாளான இன்று காலையில் பூஞ்சப்பர பவனியும், மதியம் தீர்த்தவாரிய அபிஷேகம் நடைபெற்றது.
இரவில் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி முக்கிய தெருக்கள் வழியாக வீதி உலா சென்று மீண்டும் கோவில் வந்தடைய உள்ளனர்.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டணர் . கோவில் ஆனி உத்தரப் பெரும் திருவிழா ஏற்பாடுகளை கோவில் மணியம் சுப்பையா பிள்ளை, கோவில் அர்ச்சகர் ஐயப்ப பட்டர் மற்றும் பக்த சபையினர் சிறப்பாக செய்திருந்தனர்.