அழகர் கோயில் பதினெட்டாம்படி கருப்பருக்கு 18 அடி உயரம் கொண்ட இரண்டு அருவாக்கள்
|சிங்கம்புணரியில் உள்ள அருவா செய்யும் பட்டறையில் அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பருக்கு நேர்த்திக்கடனாளர்கள் 18 அடி உயரத்தில் இரண்டு அருவாக்கள் செய்து கோவிலுக்கு எடுத்துச் சென்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் நாடார் பேட்டை அருகில் அக்ரோ சர்வீஸ் பின்புறம் அருவாள் செய்யும் பட்டறை உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோவிலுக்கு நேர்த்திகடனாளர்கள் அருவாளர்கள் செய்ய ஆர்டர்கள் கொடுக்கப்பட்டு அருவாக்கள் செய்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு சிங்கம் நரி தெற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த ஜெயங்கொண்டநிலையை பகுதியைச் சேர்ந்த கண்ணன் தேன்மொழி குடும்பத்தார் சார்பில் நேர்த்திக்கடனுக்காக மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் அருள்பாலித்து கொண்டிருக்கும் பதினெட்டாம்படி கருப்பருக்கு 18 அடியில் சுமார் 110 கிலோ எடை கொண்ட இரண்டு அருவாக்கள் (மொத்தம் சுமார் 220 கிலோ) செய்ய இங்குள்ள சேகர் ஆசாரி அருவா பட்டறை உரிமையாளரிடம் ஆர்டர் வழங்கப்பட்டது.
ஆர்டரை எடுத்துக் கொண்ட சேகர் ஆசாரி பட்டறை உரிமையாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஏழு நாட்கள் விரதம் இருந்து 18 அடி உயர அருவாள் செய்யும் பணி தொடங்கியது. ஏழு நாட்கள் நடைபெற்ற அருவா தயாரிக்கும் பணி தொடங்கி நடைபெற்றது.
பணியில் நிறைவாக தயாரிக்கப்பட்ட அருவாள் இன்று தயாரானது. நேர்த்திக்கடனானவர்கள் அதற்கு பூஜை செய்து எடுத்துக் கொண்டு அழகர்கோவிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பருக்கு வழங்கி நேர்த்திக்கடனாளர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள்.
இது குறித்து சேகர் ஆசாரி பட்டறையை சேர்ந்த விக்கி என்பவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான கோவில்களுக்கு அருவாள்கள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பர் கோவிலுக்கு பலமுறை இங்கிருந்து அருவாள் செய்யப்பட்டு கொடுக்கப்படுகிறது.
கோவிலுக்கு செய்யப்படும் அருவாக்கள் தயார் செய்யும் முன்னதாக நாங்கள் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக வழங்கப்படும் அருவாக்கள் செய்யும் நாட்களில் விரதம் இருந்து அருவாக்கள் தயார் செய்கின்றோம். தயார் செய்யப்பட்ட அருவாக்கள் நேர்த்திக்கடனையாளர்கள் எடுத்துச் சென்று கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பிறகு தான் எங்கள் விரதத்தை கைவிடுவோம் என்றார்.
பெருமிதத்தோடு 110 கிலோ எடை கொண்ட தலா இரண்டு 18 அடி அருவாக்கள் லாரியில் ஏற்றி பிரம்மாண்ட முறையில் கொண்டு செல்லப்பட்டது