< Back
ஆன்மிகம்
ஆடிவெள்ளி, வரலட்சுமி நோன்பையொட்டி  கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஈரோடு
ஆன்மிகம்

ஆடிவெள்ளி, வரலட்சுமி நோன்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
6 Aug 2022 3:20 AM IST

ஆடிவெள்ளி, வரலட்சுமி நோன்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆடிவெள்ளி, வரலட்சுமி நோன்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வரலட்சுமி நோன்பு

ஆடிவெள்ளி மற்றும் வரலட்சுமி நோன்பையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய வந்திருந்தார்கள். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசாமி கோவில், பேட்டை பெருமாள் கோவில், குருநாதசாமி வனக்கோவில், கொன்னமரத்தையன் கோவில், பிரம்மதேசம் பெத்தாரம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பண்ணாரி அம்மன்

இதேபோல் பண்ணாரி அம்மன், சென்னிமலை முருகன், கொடுமுடி மகுடேசுவரர், ஊஞ்சலூர் நாகேஸ்வரர், மாரியம்மன், செல்லாண்டியம்மன், பவானி சங்கமேஸ்வரர் கோவில்களிலும் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பவானிசாகர் அருகே உள்ளதொட்டம்பாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை ஒட்டியும், வரலட்சுமி நோன்பை ஒட்டியும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கோபி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன், அளுக்குளி செல்லாண்டியம்மன், கோபி சாரதா மாரியம்மன், புதுப்பாளையம் மகா மாரியம்மன் கோவில், சீதாலட்சுமிபுரம் தண்டு மாரியம்மன், பஸ்நிலைய காமாட்சியம்மன் கோவில், புஞ்ைச புளியம்பட்டி காந்தி நகர் மாகாளியம்மன் ேகாவில், படையாச்சி மாரியம்மன் கோவில்களில், துர்க்கை அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மேலும் செய்திகள்