< Back
ஆன்மிகம்
திருத்தணி முருகன் கோவிலில் 9 ஆண்டுகளுக்கு பிறகு அபிஷேக சேவை கட்டணம் உயர்வு..!

 திருத்தணி முருகன் கோவில்

திருவள்ளூர்
ஆன்மிகம்

திருத்தணி முருகன் கோவிலில் 9 ஆண்டுகளுக்கு பிறகு அபிஷேக சேவை கட்டணம் உயர்வு..!

தினத்தந்தி
|
23 Oct 2022 4:16 PM IST

திருத்தணி முருகன் கோவிலில் அபிஷேக சேவை கட்டணம் சேவை கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருத்தணி:

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருத்தலமாகும். இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும், அண்டை மாநிலங்களிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் மூலவருக்கு பஞ்சாமிருதம், சந்தனகாப்பு, தங்க, வெள்ளி கிரீடம் அணிவித்தல், உற்சவர் திருக்கல்யாணம், வெள்ளி மயில் வாகனம், தங்கத்தேர் உட்பட பல்வேறு சேவைகளுக்கு அதற்கான கட்டணம் செலுத்தி பக்தர்கள் பங்கேற்று வேண்டுதல் நிறைவேற்றுகின்றனர்.

இச்சேவைகளில் கட்டண மாற்றமின்றி 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நியையில், அபிஷேக பூஜைக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக, அபிஷேக சேவை கட்டணத்தை உயர்த்த முருகன் கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.

அபிஷேக சேவை கட்டணம் உயர்த்தப்பட்டு திருத்தணி முருகன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை

அபிஷேக சேவை கட்டணம் உயர்த்தப்பட்டு திருத்தணி முருகன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை

பொதுமக்கள் அபிஷேகம் சேவை கட்டணம் உயர்வு குறித்து ஆலோசனை மற்றும் ஆட்சேபணைகளை கடந்த மாதம் 25-ம் தேதி வரை தெரிவிக்கலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அபிஷேகம் சேவை கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, பஞ்சாமிர்த அபிஷேகம்- 2 ஆயிரம், திருக்கல்யாண உற்சவம் - 4 ஆயிரம், வெள்ளி மயில் வாகனம் மற்றும் இதர வாகன உற்சவம்-8 ஆயிரம், தங்கத்தேர் - 3 ஆயிரத்து 500, சந்தன காப்பு - 10 ஆயிரம், கேடய உற்சவம்- ஆயிரத்து 500, தங்க கவசம், வெள்ளிக்கவசம் சாத்துபடி- 1000, சகஸ்ர நாம அர்ச்சனை -750 ரூபாய் என தீர்மானிக்கப்பட்ட புதிய கட்டணம் அமலுக்கு வந்துள்ளது.

அபிஷேக சேவை கட்டணங்கள் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்