இந்த வார விசேஷங்கள்: 6-8-2024 முதல் 12-8-2024 வரை
|ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.
6-ந்தேதி (செவ்வாய்)
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புஷ்ப பல்லக்கில் உலா.
* மதுரை மீனாட்சியம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் பவனி.
* நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
7-ந்தேதி (புதன்)
* ஆடிப்பூரம்
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்டம்
* அங்கமங்களம் அன்னபூரணி அம்பாள் வளைகாப்பு உற்சவம்.
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பார்வதி அம்மன் முளைக்கட்டு ஊஞ்சல்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் தங்கப் பல்லக்கில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
8-ந்தேதி (வியாழன்)
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் வெட்டிவேர் சப்பரத்தில் வீதி உலா.
* சேலம் செவ்வாய் பேட்டை மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் .
* நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் ஊஞ்சல் காட்சி.
* மேல்நோக்கு நாள்.
9-ந்தேதி (வெள்ளி)
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன், திருவாடானை சிநேக வள்ளி அம்மன் தலங்களில் திருக்கல்யாணம். * இருக்கன்குடி மாரியம்மன் உற்சவம் ஆரம்பம்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் இரட்டை தோளுக்கினியானில் தீர்த்தவாரி.
* சமநோக்கு நாள்.
10-ந்தேதி (சனி)
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மாணிக்கம் விற்ற திருவிளையாடல்.
* இருக்கன்குடி மாரியம்மன் புறப்பாடு.
* குறுக்குத்துறை முருகப்பெருமான் திருவீதி உலா.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.
* சமநோக்கு நாள்.
11-ந்தேதி (ஞாயிறு)
* சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சேரமான் பெருமாள் கயிலாயம் செல்லுதல்.
* சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி விமானத்தில் பவனி.
* நயினார்கோவில் சவுந்திரநாயகி மஞ்சள் நீராட்டு விழா.
* சமநோக்கு நாள்.
12-ந்தேதி (திங்கள்)
* மதுரை மீனாட்சியம்மன் தங்க குதிரையில் பவனி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.