< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள்: 30-7-2024 முதல் 5-8-2024 வரை

தினத்தந்தி
|
30 July 2024 10:33 AM IST

ஆகஸ்ட் 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி தீர்த்தாபிஷேகம், மதுரை கள்ளழகர் கருட சேவை.

30-ந் தேதி (செவ்வாய்)

* கார்த்திகை விரதம்.

* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னிதியில் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம்.

* சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா.

* நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன், மகாலட்சுமி அலங்காரத்தில் காட்சியருளல்.

* திருத்தணி முருகப் பெருமான் தெப்ப உற்சவம்.

* கீழ்நோக்கு நாள்.

31-ந் தேதி (புதன்)

* ராமேஸ்வரம் பர்வத வர்த்தினி அம்மன் காலை தங்கப்பல்லக்கிலும், இரவு தங்க கேடய சப்பரத்திலும் பவனி. * நயினார்கோவில் சவுந்திரநாயகி ராஜாங்க அலங்காரம், இரவு வெள்ளி சிம்ம வாகனத்தில் புறப்பாடு.

* திருத்தணி முருகப் பெருமான் தெப்ப உற்சவம்.

* மேல்நோக்கு நாள்.

1-ந் தேதி (வியாழன்)

* பிரதோஷம்

* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தந்தப் பரங்கி நாற்காலியிலும், ரெங்கமன்னார் அனுமன் வாகனத்திலும் வீதி உலா.

* நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் பெரிய கிளி வாகனத்தில் பவனி.

* சமநோக்கு நாள்

2-ந் தேதி (வெள்ளி)

* சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் வெள்ளி விமானத்தில் பவனி.

* திருவாடானை சிநேக வள்ளி அம்மன் கிளி வாகனத்தில் வீதி உலா.

* ராமேஸ்வரம் பர்வத வர்த்தினி அம்மன் காலை தங்கப்பல்லக்கிலும், இரவு யானை வாகனத்திலும் புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.

3-ந் தேதி (சனி)

* ஆடிப்பெருக்கு.

* திருவல்லிபுத்தூர் ஆண்டாள் ஐந்து பெரிய திருவடி சேவை.

* நயினார்கோவில் சவுந்திரநாயகி கோலாட்ட அலங்காரம்.

* நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் அன்ன வாகனத்தில் வீதி உலா.

* சமநோக்கு நாள்.

4-ந் தேதி (ஞாயிறு)

* ஆடி அமாவாசை.

* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி தீர்த்தாபிஷேகம்.

* மதுரை கள்ளழகர் கருட சேவை.

* சதுரகிரி சுந்தர மகாலிங்கம் பெருந்திருவிழா.

* மேல்நோக்கு நாள்.

5-ந் தேதி (திங்கள்)

* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், கண்ணாடி சப்பரத்தில் பவனி.

* மதுரை மீனாட்சி முளைக்கொட்டு உற்சவம் ஆரம்பம்.

* நயினார்கோவில் சவுந்திரநாயகி சிவலிங்க பூஜை செய்தருளல்.

* நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன், மகிஷாசூர சம்கார வீலை.

* கீழ்நோக்கு நாள்.

மேலும் செய்திகள்