இந்த வார விசேஷங்கள்: 23-7-2024 முதல் 29-7-2024 வரை
|திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆகிய திருத்தலங்களில் 27-ம் தேதி அலங்கார திருமஞ்சனம்.
23-ந் தேதி (செவ்வாய்)
* குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நாராயண தீர்த்தம்.
* வடமதுரை சவுந்திரராஜர் வசந்த உற்சவம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* மேல்நோக்கு நாள்.
24-ந் தேதி (புதன்)
* சங்கடகர சதுர்த்தி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
25-ந் தேதி (வியாழன்)
* வடமதுரை சவுந்திரராஜர் குதிரை வாகனத்தில் விடையாற்று உற்சவம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* கீழ்நோக்கு நாள்.
26-ந் தேதி (வெள்ளி)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* திருத்தணி முருகன் கிளி வாகன சேவை.
* மேல்நோக்கு நாள்.
27-ந் தேதி (சனி)
* திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள், மன்னார்குடி ராஜகோபால சுவாமி ஆகிய திருத்தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* திருவரங்கம் நம்பெருமாள், தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு கண்டருளல்.
* சமநோக்கு நாள்.
28-ந் தேதி (ஞாயிறு)
* தேய்பிறை அஷ்டமி.
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் ஆரம்பம்.
* ஆலயங்களில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்.
* சமநோக்கு நாள்.
29-ந் தேதி (திங்கள்)
* திருப்போரூர் முருகப்பெருமான் கோவிலில் பால் அபிஷேகம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.