< Back
ஆன்மிகம்
Aanmigam This weeks special events 2-7-2024 to 8-7-2024
ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள்: 2-7-2024 முதல் 8-7-2024 வரை

தினத்தந்தி
|
2 July 2024 4:52 AM GMT

திருவல்லிக்கேணியில் நாளை பார்த்தசாரதி பெருமாள் மாடவீதி புறப்பாடு,திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)

* சர்வ ஏகாதசி.

* திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.

* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

* சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* கீழ்நோக்கு நாள்.

3-ந்தேதி (புதன்)

* முகூர்த்த நாள்

* பிரதோஷம்.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மாடவீதி புறப்பாடு,

* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.

4-ந்தேதி (வியாழன்)

* சிதம்பரம் சிவபெருமான் பவனி.

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

* சமநோக்கு நாள்.

5-ந்தேதி (வெள்ளி)

* அமாவாசை.

* ஆவுடையார்கோவில் சிவபெருமான் திருவீதி உலா.

* ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப்பல்லக்கில் புறப்பாடு.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

* மேல்நோக்கு நாள்.

6-ந்தேதி (சனி)

* ராமநாதபுரம் கோதண்டராமசுவாமி உற்சவம் ஆரம்பம்.

* திருவில்லிபுத்தூர் திருவி பெரியாழ்வார் விழா தொடக்கம்

* திருநள்ளார் சனி பகவான் சிறப்பு அபிஷேகம்.

* சமநோக்கு நாள்.

7-ந்தேதி (ஞாயிறு)

* முகூர்த்த நாள்.

* திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் சந்திர பிரபையில் புறப்பாடு.

* ஆவுடையார் கோவில் சிவபெருமான் பவனி.

* ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி சிம்ம வாகனத்தில் பவனி.

* மேல்நோக்கு நாள்.

8-ந்தேதி (திங்கள்)

* ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி அனுமன் வாகனத்தில் பவனி.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

* திருத்தணி முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

* கீழ்நோக்கு நாள்.

மேலும் செய்திகள்