< Back
ஆன்மிகம்
major festivals, worships and services this week
ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள்: 16-7-2024 முதல் 22-7-2024 வரை

தினத்தந்தி
|
16 July 2024 10:21 AM IST

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தீர்த்தவாரி, சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி போன்ற ஆன்மிக நிகழ்வுகள் 22-ம் தேதி நடைபெறுகின்றன.

16-ந் தேதி (செவ்வாய்)

* சங்கரன்கோவில் கோமதியம்மன் கனகதண்டியல் அலங்காரம்.

* வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் கருட வாகனத்தில் உலா.

* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.

* கீழ்நோக்கு நாள்.

17-ந் தேதி (புதன்)

* சர்வ ஏகாதசி.

* திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.

* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

* சமநோக்கு நாள்.

18-ந் தேதி (வியாழன்)

* வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் யானை வாகனத்தில் பவனி.

* சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.

* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.

* சமநோக்கு நாள்.

19-ந் தேதி (வெள்ளி)

* பிரதோஷம்.

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பவித்ரோற்சவம்.

* ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்மன், நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் பவனி.

* திருத்தணி முருகன் கிளி வாகன சேவை.

* கீழ்நோக்கு நாள்.

20-ந் தேதி (சனி)

* சங்கரன்கோவில் கோமதியம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் வெண்ணெய் தாழி சேவை.

* வடமதுரை சவுந்திரராஜர் குதிரை வாகனத்தில் பவனி.

* கீழ்நோக்கு நாள்.

21-ந் தேதி (ஞாயிறு)

* பவுர்ணமி.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித் தபசு உற்சவம், மாலை ரிஷப வாகனத்தில் பவனி.

* மேல்நோக்கு நாள்.

22-ந் தேதி (திங்கள்)

* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தீர்த்தவாரி, இரவு சப்தாவர்ணம்.

* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

* மேல்நோக்கு நாள்.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

மேலும் செய்திகள்